முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2025      இந்தியா
Biren-Singh-2025-02-09

இம்பால், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை நேற்று (பிப். 9) ராஜினாமா செய்தார். தலைநகர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் அஜய்குமார் பல்லாவை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

மணிப்பூரில் மைதேயி - குகி ஆகிய இரு பழங்குடி சமூகத்தினரிடையே நீடித்துவந்த மோதல் போக்கிற்கு தீர்வு காணத் தவறியதால், முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்த நிலையில், நேற்று தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து மைதேயி - குகி பழங்குடி சமூகத்தினரிடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது. இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பல்வேறு கலவரத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் கொல்லப்பட்டனர். கலவரத்தைத் தற்காலிகமாகத் தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் பலமுறை துண்டிக்கப்பட்டது. எனினும் பழங்குடி மக்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை.

இந்த விவகாரத்தில் எந்தவித சமரச நடவடிக்கையையும் எடுக்காத பாஜக தலைமையிலான முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. முதல்வருக்கு எதிராக இன்று (பிப். 10) கூடவுள்ள சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், தனது கட்சி உறுப்பினர்களுடன் பிரேன் சிங் நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. தலைமைச் செயலாளர் உள்பட 20 பேர் இதில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் (பிப். 8) தில்லி சென்ற பிரேன் சிங், அங்கு பாஜக மூத்த தலைவர்களை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கான காரணம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் பிரேன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, அதற்கான ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடன் நேற்று நேரில் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து