முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 14 கோடி ஏழைகள் பாதிப்பு: சோனியா காந்தி குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2025      இந்தியா
Sonia 2024-02-13

Source: provided

புதுடெல்லி: நாட்டில் சுமார் 14 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற முடியாமல் தவித்து வருவதாகத் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் நேற்று உரையாற்றிய சோனியா காந்தி, “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது 2013 செப்டம்பரில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்  அமல்படுத்தப்பட்டது. நாட்டின் 140 கோடி மக்களுக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய முயற்சி இது.

இந்த சட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களில் 75 சதவீதம் வரையிலும், நகர்ப்புற மக்களில் 50 சதவீதம் வரையிலும் மானிய விலையில் உணவு தானியங்களை பொது விநியோக முறையின்  கீழ் பெற்று வருகிறார்கள். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 81.35 கோடி பேர் இந்த சட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறார்கள்.

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பே இன்னமும் பின்பற்றப்படுகிறது. பயனாளிகளுக்கான ஒதுக்கீடு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால், சுமார் 14 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாகியுள்ளது. சுதந்திர இந்திய வரலாற்றில் இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை.  பட்ஜெட் ஒதுக்கீடுகளைப் பார்க்கும்போது, மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த ஆண்டு நடத்தப்பட வாய்ப்பில்லை என்பதையே காட்டுகின்றன. இதனால் சுமார் 14 கோடி தகுதியுள்ள இந்தியர்கள் அவர்களின் உரிமையான சலுகைகளை பெற முடியாமல் உள்ளனர் ” என்று கூறினார்.

பிரதமரின் ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தின்  கீழ் இலவச உணவு தானியங்களை விநியோகிப்பதற்கான காலம் ஜனவரி 1, 2024 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து