முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் பங்கேற்க முடிவு

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2025      தமிழகம்
Strike 2025-02-10

Source: provided

தாம்பரம்: ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள போராட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பாக நூறு சதவீதம் ஆசிரியர்கள் கலந்து  கொள்வார்கள் என பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி, மாநில தலைவர் தீனதயாள், மாநில பொருளாளர் ருக்மாங்கதன் ஆகியோரின் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திருச்சியில் கூடிய ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் கடந்த 4-ம் தேதி  எடுக்கப்பட்ட முடிவின் படி 10 அம்ச கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 14-ம் தேதி வட்டார அளவிலான மாலை நேர ஆர்ப்பாட்டத்தை மிகுந்த எழுச்சியாக நடத்துவது, அதனை தொடர்ந்து வருகிற 25-ம் தேதி மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு,. உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அறிவித்து நடத்த உள்ள போராட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் பங்குபெறுவார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின், இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து பேச வேண்டுமென தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து