முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை தலைமைச்செயலகத்தில் மதி அனுபவ அங்காடி திறப்பு : துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2025      தமிழகம்
Udayanidhi 2021 12 12

Source: provided

சென்னை : தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் மதி அனுபவ அங்காடியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில, மாவட்ட, வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகள், மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள், மதி அங்காடி, மதி இணையதளம், மதி சிறுதானிய உணவகம் மற்றும் இயற்கைச் சந்தைகள் என பல்வேறு செயல்பாடுகள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாக இன்று சுய உதவிக் குழுக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, "மதி அனுபவ அங்காடி"  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் 18.11.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது. மதி அனுபவ அங்காடிக்கு பொதுமக்கள் அளித்த வரவேற்பினைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இரண்டாவது மதி அனுபவ அங்காடியினை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஸ்ரேயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து