முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 மாதத்தில் 87 ஆயிரம் பேருக்கு பட்டா; தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2025      தமிழகம்
CM-1 2023-11-18

Source: provided

சென்னை : 6 மாதத்தில் 87 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம், நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

அமைச்சர் கூறியதாவது: சென்னையைச் சுற்றியுள்ள பெல்ட் ஏரியா எனப்படும் 4 மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் 32 கி.மீ., தொலைவுக்குள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட ஆண்டுகளாக பட்டா பெற முடியாமல் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சென்னையில் மட்டும் 29,187 பேர் ஆட்சேபனை இல்லாத புறம்போக்குகளில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் 6 மாதத்திற்கு பட்டா வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளார். சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்ட மக்களுக்கு இது வரப்பிரசாதமாகும். மதுரை, நெல்லை போன்ற பிற மாநகராட்சிகளிலும் இது போன்ற பிரச்னைகள் நிலவுகிறது. மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகர் பகுதிகளில் வசிக்கும் 57,084 பேருக்கும் பட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஏறத்தாழ 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கும் தீர்மானத்தை இன்றைய அமைச்சரவையில் முடிவெடுத்து, 6 மாதத்தில் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதில், பட்டா கோரி விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால், அதனையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு இதுவரையில் பட்டா வழங்கியுள்ளோம். 6 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கும் பணியும் செய்து வருகிறோம்.

அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பட்டா கோரி விண்ணப்பிக்கலாம். தேவைப்பட்டால், தாலுகா வாரியாக முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு! சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்துவரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளோம். 6 மாதங்களில் இதனைச் செய்து முடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன!" என்று பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து