முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்க அணி வீரர் சாதனை

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2025      விளையாட்டு
South-Africa 2023-12-24

Source: provided

அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை தென் ஆபிரிக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கே  பெற்றுள்ளார். பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 304 ரன்கள் குவித்தது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக அறிமுக வீரரான மேத்யூ பிரீட்ஸ்கே 150 ரன்கள் குவித்தார். தொடர்ந்து 305 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து ஆடி வருகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் 150 ரன்கள் எடுத்ததன் மூலம் தென் ஆப்பிரிக்காவின் மேத்யூ பிரீட்ஸ்கே மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற மாபெரும் சாதனையை மேத்யூ பிரீட்ஸ்கே (150 ரன்) படைத்துள்ளார். இதற்கு முன் இந்த சாதனை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் டேஸ்மாண்ட் ஹெய்னஸ் (148 ரன், 1978) முதல் இடத்தில் இருந்தார்.

________________________________________________________________________________

இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசி.,

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து முன்னேறியது. பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 304 ரன்கள் குவித்தது. 

இதையடுத்து களம் புகுந்த டேரில் மிட்செல் 10 ரன்னிலும், டாம் லாதம் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். தொடர்ந்து கிளென் பிலிப்ஸ் களம் இறங்கினார். பிலிப்ஸ் - வில்லியம்சன் இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதோடு அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இறுதியில் நியூசிலாந்து 48.4 ஒவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 308 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி முத்தரப்பு ஒருநாள் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் 12ம் தேதி கராச்சியில் நடைபெறும் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நியூசிலாந்துடன் இறுதிப்போட்டியில் மோதும்.

________________________________________________________________________________

ஜிம்பாப்வேயை வீழ்த்தியது அயர்லாந்து 

புலவாயோவில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர் லாந்து அணி வெற்றி பெற்றது. அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்நிலையில், 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மேற்கொண்டு 109 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணியும், 3 விக்கெட் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அயர்லாந்து அணியும் நேற்றைய ஆட்டத்தை தொடங்கின. சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய மாதவேரே 84 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த ஜிம்பாப்வே வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இறுதியில் ஜிம்பாப்வே தனது 2வது இன்னிங்சில் 228 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக 63 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. அயர்லாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய மேத்யூ ஹம்ப்ரிஸ் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 1 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை அயர்லாந்து கைப்பற்றி அசத்தியது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் வரும் 14ம் தேதி ஹராரேவில் நடக்கிறது.

________________________________________________________________________________

47 ஆண்டு கால சாதனை முறியடிப்பு 

லாகூரில் நேற்று நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் அறிமுகத் தொடக்க வீரர் மேத்யூ பிரெட்ஸ்கீ 148 பந்துகளில் 150 ரன்களை விளாசி நியூஸிலாந்துக்கு எதிராக உலக சாதனை புரிந்தார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அறிமுகப் போட்டியில் ஒரு வீரர் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுவே. 1978ம் ஆண்டு மே.இ.தீவுகளின் அப்போதைய தொடக்க வீரர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆண்டிகுவாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 148 ரன்களை எடுத்ததே அறிமுக வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இப்போது 47 ஆண்டுகள் சென்று பிரெட்ஸ்கீ மூலம் இந்தச் சாதனை உடைக்கப்பட்டுள்ளது.  

மேலும், அறிமுகப் போட்டியிலேயே சதம் எடுத்த 4-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் பெற்றார் பிரெட்ஸ்கீ. 2022-23 உள் நாட்டு கிரிக்கெட் சீசனில் முதல் தர கிரிக்கெட்டில் 14 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் 4 அரைசதங்களை 60.58 என்ற சராசரியில் எடுத்ததால் இவர் தேர்வுக்கு உரியவரானார். ஏற்கெனவே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியிருக்கிறார். ஆனால் சோபிக்கவில்லை, இப்போது உலகத்திற்கு உலக சாதனை மூலம் தெரியவந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து