முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரியில் குற்றவாளிகள் இரண்டு பேர் மீது துப்பாக்கி சூடு : தப்ப முயன்றதால் போலீஸ் நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2025      தமிழகம்
Police 2024 08 12

Source: provided

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் போலீசாரை தாக்கி விட்டுத் தப்ப முயன்ற குற்றவாளிகளை துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

கிருஷ்ணகிரியில் மலைப்பகுதியில் கூலி வேலைக்கு சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 போதை இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் இருவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று பொன்மலைகுட்டை பெருமாள் கோவில் பின்புறம் 2 பேர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது குற்றவாளிகள் கத்தியால் தாக்கியதில் 2 போலீசார் காயமடைந்தனர்.

பின்னர் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சுரேஷ் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. தப்பி செல்ல முயன்ற நாராயணனுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் ஆய்வு செய்தார். துப்பாக்கி சூடு நடைபெற்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து