முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் டெல்லி முதல்வர் ரேகா குப்தா சந்திப்பு

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      இந்தியா
Modi-2025-02-22

புதுடில்லி, டில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா,  பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.  

பிப்ரவரி 20 அன்று ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது இருவரும் சந்திப்பு மேற்கொண்டனர். இந்நிகழ்வின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல்வேறு தலைவர்களும் இருந்தனர்.

முன்னதாக நேற்று தேசிய தலைநகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, சேதமடைந்த சாலைகளைச் சீர்செய்வது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் குப்தா ஒரு சந்திப்பை மேற்கொண்டார். அப்போது சேதமடைந்த சாலைகள், போக்குவரத்து தொடர்பான அனைத்து பிரச்னைகளும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார் என்று பா.ஜ.க.வின் எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டில்லியின் பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, பைரோன் மார்க் முதல் சராய் காலே கான், ரிங் ரோடு வரை துறையின் திட்டங்களை ஆய்வு செய்தார்.

டில்லியின் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அதிஷி, டில்லி அரசு பெண்களுக்கு ரூ.2,500 வழங்கும் திட்டத்தை இன்னும் நிறைவேற்றாதது குறித்து தனது கவலையைத் தெரிவித்து முதல்வர் ரேகா குப்தாவுக்கு கடிதம் எழுதினார். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க டில்லி முதல்வரை சந்திக்க ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து