முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சனிக்கிழமை, 1 மார்ச் 2025      தமிழகம்
CM-1-2024-07-15

Source: provided

சென்னை : தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நேற்று 72-வது பிறந்தநாளை கொண்டாடிய முதல்வர் , மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இனிப்பு வழங்கினார்.

மாணவர் சேர்க்கையை முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த போது துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கைகளுக்கு தக்க பலன் கிடைத்தும் உள்ளது. அந்த வகையில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏற்கனவே தொடங்கி இருந்தாலும், நேற்று முதல் மாணவர் சேர்க்கை பணிகளை தீவிரமாக மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருந்தது.

இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முதல்வர்  மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையைத் தொடங்கிவைத்து சிறப்பித்தார். அமைச்சர் பெருமக்களும், இலட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் வாழ்த்துகள் தெரிவிக்க காத்துக்கொண்டிருக்கையில், நேராக அரசுப் பள்ளிக்கு வருகை புரிந்த முதல்வர்  மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை மாணவர்களிடம் இருந்து தொடங்கினார்.

துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அமைந்துள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை முதல்வர்  தொடங்கிவைத்து சிறப்பித்தார். மாணவர்கள், ஆசிரியப் பெருமக்களோடு இணைந்து முதல்வர்  அவர்களை வாழ்த்தி வணங்கினோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து