முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி கடைசி லீக்: இந்திய-நியூசி. அணிகள் இன்று துபாயில் மோதல்

சனிக்கிழமை, 1 மார்ச் 2025      விளையாட்டு
India 2024-05-11

Source: provided

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது கடைசி லீக் போட்டியில் இன்று இந்திய-நியூசி. அணிகள் மோதுகின்றன.

அரையிறுதிக்கு தகுதி...

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் தொடரை நடத்தும் பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து அணிகள் லீக் சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறியுள்ளன. மீதமுள்ள அரையிறுதி இடங்களுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. அதில் தென் ஆப்பிரிக்கா அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது.

கடைசி லீக் போட்டி...

இந்நிலையில் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்துடன் இன்று விளையாடவுள்ளது. இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இதே போல் முகமது ஷமியும் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் கேப்டனாக செயல்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ரிஷப் - அர்ஷ்தீப் சிங்...

இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் சுப்மன் கில் களமிறங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோகித் சர்மாவுக்கு பதிலாக, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டும் முகமது சமிக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து