முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் பிரச்சினையில் ஆக்கபூர்வமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் : தமிழ்நாடு அரசுக்கு கவர்னர் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2025      தமிழகம்
RN-Ravi 2023 04 05

Source: provided

ராமேசுவரம் : மீனவர் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாக  ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரிதும் உதவும் என கவர்னர்  ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக கவர்னர் ஆா்.என்.ரவி, ராமேசுவரம் செம்மமடம் பகுதியில் மனோலயா மனநல காப்பகக் கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக  நேற்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வந்த ஆளுநரை மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் வரும் வழியில், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மூன்றாவது நாளாக நடைபெற்ற மீனவர்களின் காத்திருப்பு போராட்ட பந்தலுக்கு தமிழக கவர்னர்  ஆர்.என். ரவி சென்றார். ஆளுநரை மீனவ பிரதிநிதிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

மீனவர்கள் தமிழக கவர்னர்  ஆர்.என். ரவியிடம், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர். காத்திருப்பு பந்தலில் அமர்ந்திருந்த மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய கவர்னர்  ஆர்.என். ரவி, மீனவர் பிரச்சினை குறித்து உடனடியாக தான் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.

இது குறித்து கவர்னர்  ஆர்.என். ரவி, தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:  1974 ஆம் ஆண்டு மத்தியிலும், மாநிலத்திலும் இருந்த அரசுகள், கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியை அநியாய ஒப்பந்தம் மூலம் கொடுத்து பெரும் பாவத்தை மீனவர்களுக்கு இழைத்தன. அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. 

இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாகவும், மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும், ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரிதும் உதவும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து