முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. அலிகர் முஸ்லிம் பல்கலை.யில் பிளஸ் 1 மாணவர் சுட்டுக்கொலை : சக மாணவர் வெறிச்செயல்

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2025      இந்தியா
Gun 2023 04 17

Source: provided

புதுடெல்லி : உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் பிளஸ் 1 மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இப்பல்கலைக்கழக வளாகத்தில் சமீப காலமாக துப்பாக்கிக் கலாச்சாரம் மீண்டும் பெருகுவதாகக் கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேசம் அலிகர் நகரில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. சுமார் 150 வருட பழமையான இந்த மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளிகளும் உள்ளன. அதில் ஒரு பள்ளியான ஏ.பி.கே. யூனியன் பள்ளியில் நேற்று  முன்தினம் (சனிக்கிழமை) மதியம் ப்ளஸ் 1 பயிலும் மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சகமாணவருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து  அலிகர் சிவில்லைன் காவல்நிலையத்தின் ஆய்வாளர் அபய் பாண்டே கூறுகையில், “அலிகர் பல்கலைக்கழகத்தின் ஏ.பி.கே.யூனியன் உயர்நிலைப் பள்ளியின் மாணவர்கள் சிலர் இரண்டு குழுக்களாகி மோதிக் கொண்டனர். இதில் துப்பாக்கியுடன் இருந்த ஒரு மாணவர் பிளஸ் 1 பயிலும் முகம்மது கைப் என்ற மாணவனைத் துப்பாக்கியால் சுட்டு விட்டார். இதில் காயமடைந்த கைப்பை வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தும் அவரது உயிர் பிரிந்தது.” எனத் தெரிவித்தார். 

உயிரிழந்த மாணவன் முகம்மது கைப்பின் தந்தை முகம்மது நையீம், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் நிர்வாக அலுவலராக பணியாற்றுகிறார்.  துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்ட மாணவர்களைப் பிடிக்க மூன்று போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து சிசிடிவி காட்சிகளையும் பெற்று நடவடிக்கை தொடரப்பட உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து