முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனைவிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மார்க் ஜூக்கர்பெர்க்

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2025      உலகம்
Mark-zuckerberg

Source: provided

லண்டன்: மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் மனைவியின் பிறந்தநாளில், மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மனைவியான பிரிஸில்லாவின் 40 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனிடையே, கிராமி விருது பெற்ற அமெரிக்கப் பாடகர் பென்சன் பூன் அணிந்த ஆடையைப் போன்று அணிந்து அதன் மீது கருப்பு உடையை அணிந்து, மார்க் ஜூக்கர்பெர்க் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மனைவி பிரிஸில்லாவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஆடைகளைக் களைந்து பாடகரின் உடையில் நிகழ்ச்சியில் மார்க் வலம் வந்தார். மார்க்கின் இந்த செயல்பாடு, பிரிஸில்லாவின் சிரிப்பலையை நிகழ்ச்சி முழுவதும் ஆட்கொள்ள வைத்தது என்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். தொடர்பான விடியோக்களை மார்க் ஜூக்கர்பெர்க் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 2012 ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்துகொண்ட மார்க் ஜூக்கர்பெர்க்குக்கும் பிரிஸில்லாவுக்கும் 3 மகள்கள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து