முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான், ஈரானில் இருந்து ஆப்கன் அகதிகள் நாடுகடத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2025      உலகம்
Image Unavailable

Source: provided

காபூல்: பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து சுமார் 613 ஆப்கானிஸ்தான் அகதிகள் நாடு திரும்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் பிரதிநிதி அராபத் ஜமால், கடந்த 2024 ஆம் ஆண்டில் 21 லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியதாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 21 முதல் 28 வரை ஈரான் 501 பேரை வெளியேற்றியதாகவும், பாகிஸ்தான் 112 பேரை வலுக்கட்டாயமாக நாடு கடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான், ஈரானில் இருந்து கட்டாயமாக நாடுகடத்தப்பட்டவர்கள் குறித்துப் பேசிய ஜமால், "ஆப்கானிஸ்தானின் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதிக்கு பங்களிக்கும் விதத்தில் சரியான முறையில் அவர்கள் நாடு திரும்புவதை உறுதிசெய்ய நாங்கள் உடன்பட்டுள்ளோம்" என்று கூறினார்.

நாடுகடத்தப்படும் மக்களை கண்ணியத்துடன் நடத்தவும், அவர்கள் வீடு திரும்புவதை உறுதி செய்யவும் அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார். அவர்களை சரிவர நடத்தவில்லை என்றால் எல்லையின் இருபுறமும் குழப்பமான சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் போர் மற்றும் மோதலில் இருந்து தப்பி, பல ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பாகிஸ்தான் மற்றும் ஈரானில் தஞ்சம் புகுந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து