முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பிரேசில் லெஜண்ட்ஸ் கால்பந்து போட்டிக்கான முன்பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2025      விளையாட்டு
Ronaldo 2023 08 12

Source: provided

சென்னை : பிரேசில் லெஜண்ட்ஸ் - இந்தியா ஆல் ஸ்டார் அணிகள் மோதும் கால்பந்து போட்டி வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு புட்பால் பிளஸ் அகாடமி ஏற்பாடு செய்துள்ளது. 

லெஜண்ட்ஸ் கால்பந்து... 

பிரேசில் லெஜண்ட்ஸ் கால்பந்து அணியில் 2002-ம் ஆண்டு பிபா உலகக் கோப்பை தொடரை வென்ற ரொனால்டினோ, ரிவால்டோ, கபு, கில்பெர்டோ சில்வா, எட்மில்சன், கிளெபர்சன், ரிக்கார்டோ ஒலிவேரா, ககாபா, கமண்டுகாயா, எலிவெல்டன், பாலோ செர்ஜியோ, ஹியூரெல்ஹோ கோம்ஸ், டியாகோ கில், ஜோர்ஜின்ஹோ, அமரல், லூசியோ, அலெக்ஸ் பெரோ, ஜியோவானி, வயோலா மார்செலோ உள்ளிட்டோர் இடம் பெறுகின்றனர்.

முன்பதிவு தொடக்கம்...

இந்தியா ஆல் ஸ்டார் அணி முன்னாள் பயிற்சியாளர் பிரசந்தா பானர்ஜி தலைமையில் களமிறங்குகிறது. இந்த அணியில் மெஹ்தாப் ஹொசைன், அல்விடோ டி’குன்ஹா, சையத் ரஹீம் நபி, சுபாசிஷ் ராய் சவுத்ரி, மெஹ்ராஜூதின் வாடூ, சண்முகம் வெங்கடேஷ், அர்னாப் மொண்டல், மகேஷ் கவ்லி உள்ளிட்டோர் விளையாட உள்ளனர். இந்த போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு புக்மைஷோ இணையதளத்தில் நேற்று  மாலை 4 மணிக்கு தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து