முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 மற்றும் ஒருநாள் தொடர்:வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      விளையாட்டு
18-Ram-51

Source: provided

டாக்கா: டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்காக வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

வங்கதேச அணி... 

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர்கள் மே மாதத்தில் தொடங்கவுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 10-வது சீசன் வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 18 வரை நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த பிறகு, பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் தொடங்கும் எனத் தெரிகிறது.

டி20, ஒருநாள் தொடர்... 

இதற்கு முன்பாக கடந்த ஆண்டு வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த டெஸ்ட் தொடரை வங்கதேசம் 2-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது. வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் பைசலாபாத், முல்தான் மற்றும் லாகூரில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து