முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெரு நாய்கள் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு : சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

புதன்கிழமை, 19 மார்ச் 2025      தமிழகம்
Periyasamy 2023-09-02

Source: provided

சென்னை : தெரு நாய்கள் கடித்து மரணிக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் நேற்று தொடங்கி நடைபெற்றது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தெரு நாய் கடி சம்பவம் தொடர்பாகவும், நாய் கடித்து மரணம் அடையும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருப்பண்ணன் மற்றும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர்.

இதற்கு பதில் அளித்த பேசிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, "சமீப காலங்களில் தெரு நாய்கள் கடித்து வெள்ளாடு, செம்மறி ஆடுகள் பாதிக்கப்படுவதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. தெரு நாய்கள் கடித்து மரணம் அடையும் கால் நடைகளுக்கு பேரிடர் மேலாண்மை விதிகளின் படி உரிய இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தெரு நாய் கடித்து உயிரிழக்கும் மாடுகளுக்கு ரூ.37,500, ஆடுகளுக்கு ரூ.4,000, கோழிக்கு ரூ.100 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி தெரு நாய்கள் கடித்து மரணம் அடைந்த 1,149 கால்நடைகளுக்கு மொத்தம் ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "தெருநாய்கள் பிரச்னை தொடர்பாக நேற்று முன்தினமே உரிய விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. வெறிநாய்களை பிடித்து அவற்றிற்கு ஊசி செலுத்தி குணமடைந்த பின் மீண்டும் விட்டுவிட வேண்டும் என சட்டம் சொல்கிறது. வெறிநாய்களை கட்டுப்படுத்த சுப்ரீம்கோர்ட்டில் சிறப்பு மனு தாக்கல் செய்து உத்தரவு பெற்றால் தான் தீர்வு கிடைக்கும், இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை முதல்வர் அறிவித்து உள்ளார் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து