முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 7 ஆந்திர எம்.எல்.ஏ.க்களுக்கு இடம்

புதன்கிழமை, 19 மார்ச் 2025      இந்தியா
INDIA

Source: provided

திருப்பதி : இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 7 ஆந்திர எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் நாட்டில் உள்ள 28 மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் சொத்து விவரம் மற்றும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்த ஆய்வு நடத்தியது. இதில் நாட்டில் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஆந்திராவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ரூ.931 கோடி சொத்துக்களுடன் 5-வது இடம் பிடித்துள்ளார். மந்திரி பி.நாராயணா ரூ.824 கோடியுடன் 6-வது இடத்திலும், முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ரூ.757 கோடியுடன் 7-வது இடத்திலும் பிரசாந்தி ரெட்டி எம்.எல்.ஏ என்பவர் ரூ.716 கோடியுடன் 8-வது இடத்திலும் உள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் மகன் நாராலோகேஷ் ரூ.542 கோடி சொத்துக்களுடனும், நடிகர் பாலகிருஷ்ணா ரூ.482 கோடி மற்றும் மாதவி எம்.எல்.ஏ. ரூ.388 கோடியுடன் முதல் 20 பேர் கொண்ட பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

நாட்டில் உள்ள பணக்கார எம்.எல்.ஏ.க்களில் முதல் 20 பேரில் ஆந்திராவைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர். துணை முதல் மந்திரி பவன் கல்யாண் தேசிய சொத்து மதிப்பில் 66-வது இடத்தில் உள்ளார். ஆந்திர எம்.எல்.ஏ.க்கள் 27 பேர் 100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர். சொத்து மதிப்பில் மட்டுமல்லாது குற்ற வழக்குகளிலும் ஆந்திராவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அதிகம் பேர் இடம்பெற்றுள்ளனர். ஆந்திராவில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 138 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தேர்தலில் மனுத்தாக்களின் போது தெரிவித்துள்ளனர். கேரளாவில் 9, தெலுங்கானா 82, பீகார் 158 ,மகாராஷ்டிரா 127, தமிழ்நாட்டில் 132 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து