எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தொகுதி மறுவரையறை தொடர்பான இன்றைய கூட்டத்தில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறோம் என்று வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
ஆலோசனைக் கூட்டம்...
தொகுதி மறுவரையறை பேசுபொருளாகியது ஏன்? என்று வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக இன்று மார்ச் 22-ம் தேதி சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் சூழலில் முதல்வர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
உரிமை சார்ந்த பிரச்சினை...
அந்த வீடியோவில் முதல்வர் பேசியிருப்பதாவது:- தொகுதி மறுவரையறை. இதுதான் இப்போது பேசுபொருளாக உள்ளது. தி.மு.க. ஏன் இதை பேசுபொருளாக்கியது என்றால், 2026-ல் தொகுதி மறுவரையறை கண்டிப்பாக நடந்தே ஆக வேண்டும். அப்போது, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டில் எம்.பி. தொகுதிகள் எண்ணிக்கை குறையும். தொகுதிகள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று உணர்ந்துதான் நாம் முதலில் குரல் எழுப்பியுள்ளோம். இது எம்.பி.க்கள் எண்ணிக்கை சார்ந்த பிரச்சினை மட்டும் கிடையாது. நமது மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சினை.
ஒருங்கிணைத்து போராட...
அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தினோம். பா.ஜ.க. தவிர மற்ற எல்லா கட்சியினரும் ஓரணியில் நின்று நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம். அதில் இந்த தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படக் கூடிய மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து போராட முடிவு செய்தோம். அதற்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய 7 மாநிலங்களின் முதல்வர்களுக்கும், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள எல்லா கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதங்களை ஒரு அமைச்சர் மற்றும் ஒரு எம்.பி. அடங்கிய குழுவினர் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர். நானே அவர்களுடன் தொலைபேசியிலும் பேசினேன். சிலர் நேரடியாக வர ஒப்புக் கொண்டனர். சிலர் ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளால் பிரதிநிதிகளை அனுப்பிவைப்பதாகக் கூறினர்.
அவமதிக்கும் செயல்...
இந்த முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 22) சென்னையில் நடக்கவிருக்கிறது. இப்போது இந்தக் கூட்டத்துக்கு அவசியம் எனனவென்று பலரும் கேட்கிறார்கள். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடும் நாம் அழைத்துள்ள மாநிலங்களும் பாதிக்கப்பட்டால் இந்திய நாட்டில் கூட்டாட்சிக்கான பொருள் இருக்காது. ஜனநாயகத்துக்கு மதிப்பு இருக்காது. பாராளுமன்றத்தில் நம் குரல்கள் நசுக்கப்படும். நம் குரல்களை நிலைநாட்ட முடியாது. இது இந்த மாநிலங்களை அவமதிக்கும் செயல். எனவே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பாக பங்களிப்பு செய்த மாநிலங்களுக்கு மத்திய அரசு தண்டனை கொடுக்கக் கூடாது. அதனால்தான் தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான கட்சிகளுடைய ஒருங்கிணைந்த சிந்தனையின்படி மற்ற மாநிலங்களை ஒருங்கிணைக்கும் இந்தக் கூட்டம் நடைபெறப் போகிறது.
இந்தியாவைக் காக்கும்....
இந்தக் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும். அதன் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் வெற்றியடையும். நம்முடைய இந்த முன்னெடுப்பு இந்தியாவைக் காக்கும். இன்றைய கூட்டம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க முதல் தொடக்கமாக இருக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம், மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்கள் கண்டன வாசகங்கள் அச்சிடப்பட்ட டி ஷர்ட் அணிந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பங்கேற்றனர். அவர்களின் போராட்டங்களால் அவை நடவடிக்கை முடங்கியது என்பது நினைவுகூரத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
7 மாநில பிரதிநிதிகளுக்கு தமிழக அரசின் சார்பில் பரிசுப்பொருட்கள்
22 Mar 2025சென்னை : 7 மாநில பிரதிநிதிகளுக்கு தமிழ்நாட்டின் அடையாளங்களாக விளங்கும், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
-
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 11 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை வருகை
22 Mar 2025சென்னை : இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களும் ஏர்இந்தியா விமானத்தில் சென்னை வந்தனர்.
-
துணை முதல்வர் கோவை வருகை: பாதுகாப்பு பணியில் 600 போலீசார்
22 Mar 2025கோவை : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று கோவை வருகிறார். இதற்காக 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
-
ஐ.பி.எல். சீசனில் டோனியின் சாதனைகள்
22 Mar 2025சென்னை : 43 வயதான மகேந்திர சிங் டோனி தனது 18-வது ஐ.பி.எல். சீசனில் விளையாட உள்ளார்.
-
ஷாருக்கான் நேரில் வாழ்த்து
22 Mar 2025இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் நேற்று தொடங்கியது.
-
எதிர்கால சந்ததியினருக்கு நாம் நீரை பாதுகாப்பது அவசியம் : பிரதமர் மோடி வலியுறுத்தல்
22 Mar 2025டெல்லி : எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரைப் பாதுகாப்பது அவசியம் என்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ரெய்னா சாதனையை முறியடிக்க டோனிக்கு 19 ரன்களே தேவை
22 Mar 2025சென்னை : 18-வது ஐ.பி.எல். சீசன் நேற்று தொடங்கியது.
-
சட்டசபைக்கு விடுமுறை: மீண்டும் மானியக்கோரிக்கை மீது விவாதம் 24-ம் தேதி தொடக்கம்
22 Mar 2025சென்னை : தமிழக சட்டசபை வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடுகிறது. மீண்டும் மானியக்கோரிக்கை மீது விவாதம் 24-ம் தேதி தொடங்குகிறது.
-
கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ. 50 லட்சம் கடன்: தமிழக அரசு
22 Mar 2025சென்னை : கால்நடை பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஐ.பி.எல். தொடரை வெற்றியுடன் தொடங்குமா சென்னை அணி..? - இன்று மும்பையை எதிர்கொள்கிறது
22 Mar 2025சென்னை : நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்சுடன் மோத உள்ளது.
-
ஐ.பி.எல். 2025 சீசன்: சூப்பர் ஓவர் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியீடு
22 Mar 2025மும்பை : ஐ.பி.எல். 2025 சீசனில் சூப்பர் ஓவர் தொடர்பான முக்கிய அறிவிப்பை ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
விதிகளில் மாற்றம்...
-
சி.எஸ்.கே. அணியில் சகோதர வீரர்கள்? - புகைப்படம் இணையத்தில் வைரல்
22 Mar 2025சென்னை : இரண்டு சி.எஸ்.கே. வீரர்கள் சகோதரர்கள் போலிருக்கிறார்கள் என்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-03-2025.
23 Mar 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-03-2025.
23 Mar 2025 -
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் : 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற முழக்கம்
23 Mar 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
-
காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் பலி
23 Mar 2025காசா சிட்டி : காசா முனையின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நேற்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்
-
தியாகிகள் தினம்: பகத் சிங், ராஜகுரு, சுகதேவுக்கு பிரதமர் மோடி, ராகுல் அஞ்சலி
23 Mar 2025புதுடெல்லி : நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் அச்சமற்ற முயற்சி நம் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் நரே
-
ராமகிருஷ்ண மடத்தில் புதுப்பிக்கப்பட்ட பல் மருத்துவ மையம் தொடக்கம்
23 Mar 2025சென்னை : ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தர்ம வைத்தியசாலையில் புதிதாக விவேகானந்தா மருந்தக த்தையும், புதுப்பிக்கப்பட்ட சாரதா பல் மருத்துவ மையத்தையும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.ச
-
பணத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை: நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கம்
23 Mar 2025புதுடெல்லி : தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக கூறப்படுவதை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா கடுமையாக மறுத்துள்ளார்.
-
ஐ.பி.எல். போட்டி: கடற்கரை-வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரெயில் சேவை
23 Mar 2025சென்னை : ஐ.பி.எல்.
-
கோவை கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: ஜூனியர் மாணவர்கள் 13 பேர் சஸ்பெண்ட்
23 Mar 2025கோவை : கோவையில் சீனியர் மாணவர் ஒருவரை தாக்கிய முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
-
நீதிபதியை விமர்சிப்பவருக்கு எலான் மஸ்க் நிதியுதவி அளிப்பதாக குற்றச்சாட்டு
23 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்க நீதிபதிகளை விமர்சனம் செய்வோருக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தாராளமாக நிதியுதவி வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
எனது சொந்த பணத்தில் இருந்து சுனிதா வில்லியம்சுக்கு சம்பளம்: அதிபர் டிரம்ப்
23 Mar 2025வாஷிங்டன் : எனது சொந்த பணத்தில் இருந்து சுனிதா வில்லியம்சுக்கு சம்பளம் வழங்குவேன் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
23 Mar 2025சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
-
நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது
23 Mar 2025நெல்லை : நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.