முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷாருக்கான் நேரில் வாழ்த்து

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      விளையாட்டு
Shahrukh-Khan 2024-03-29

Source: provided

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் நேற்று தொடங்கியது. கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் 18-வது ஆண்டாக வீறுநடை போடுகிறது. இந்த நிலையில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று (சனிக்கிழமை) தொடங்கி மே 25-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. 

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. முன்னதாக, கொல்கத்தா அணி வீரர்களை நேரில் சந்தித்து நடிகரும் , கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்தார் . இது தொடர்பான விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . 

______________________________________________________________________________________________________

பாகிஸ்தான் உலக சாதனை 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.  இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று முன்தினம்நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 19.5 ஓவர்களில் 204 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.  இதனையடுத்து 205 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 16 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 207 ரன் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெறும் 16 ஓவர்களில் 205 ரன்களை சேசிங் செய்து அசத்தியது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200+ ரன்களை அதிவேகமாக சேசிங் செய்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. இதற்கும் முன்னர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி 17.4 ஓவர்களில் 206 ரன்களை சேசிங் செய்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள பாகிஸ்தான் புதிய உலக சாதனை படைத்துள்ளது. 

______________________________________________________________________________________________________

அர்ஜென்டினாவிடம் உருகுவே தோல்வி

2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் தென்அமெரிக்க அணிகளுக்கான தகுதி சுற்றில் இந்திய நேரப்படி இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா -  உருகுவே அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய அர்ஜென்டினா ஆட்ட நேர முடிவில்  1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.  அர்ஜென்டினா அணியில் தியாகோ அல்மடா கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இந்த பிரிவில் அர்ஜென்டினா அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 28 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

______________________________________________________________________________________________________

சென்னை போட்டி குறித்து ஹர்பஜன்

ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் திருவிழா நேற்று  தொடங்கியது. இன்று ஞாயிற்றுக்கிழமை 2 போட்டிகள் நடைபெறுகின்றன. இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்காக இரண்டு அணிகளும் தயாராகி வருகின்றன. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னை - மும்பை போட்டியானது ஐ.பி.எல்.-இல் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை போன்றது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹர்பஜன் சிங், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல்.-இல் சிறந்த அணிகளில் ஒன்றாகும். சென்னை அணியை தோற்கடிக்கும் அணி தலைப்புச் செய்திகளில் இடம்பெறும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் அது பொருந்தும். ஒவ்வொரு ஐ.பி.எல். சீசனிலும் பல இளம் வீரர்கள் வருகிறார்கள். ரன்கள் அடிக்கிறார்கள், விக்கெட்டுகளை எடுக்கிறார்கள். ஆனால் என்னுடைய பார்வை எல்லாம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ரியான் பராக் மேல் தான் உள்ளது. அவரிடம் அற்புதமான திறமை உள்ளது" என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து