Idhayam Matrimony

டெஸ்ட் விமர்சனம்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      சினிமா
Test-Review 2025-04-07

Source: provided

நட்சத்திர கிரிக்கெட் வீரரான சித்தார்தை அணியில் இருந்து நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்கிறது. அதனால், ஓய்வு அறிவிப்பை வெளியிட அவரை வற்புறுத்துகிறது. ஆனால், அவரோ இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஓய்வை அறிவிக்க நினைக்கிறார். நீர் மூலம் கிடைக்கும் எரிபொருளாக கொண்டு வாகனங்களை இயக்கும் தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் பெறும் முயற்சியில் ஈடுபடுகிறார் மாதவன். திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் தவிக்கிறார்  நயன்தாரா, இப்படி இவர்கள் மூவரின் பயணத்தை ஒரே புள்ளியில் சந்திக்க வைக்கும் கிரிக்கெட் போட்டி, இவர்களை மிகப்பெரிய பிரச்சனையில் சிக்க வைக்கிறது. அதனை இவர்கள் எப்படி கடக்கிறார்கள் என்பதை சொல்வதே டெஸ்ட் படம்.  முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மாதவன், சித்தார்த் மற்றும் நயன்தாரா மூவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மீரா ஜாஸ்மின், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலரும் தங்களின் இயல்பான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். சக்திஸ்ரீ கோபாலனின் இசை ஓகே ரகம். எழுதி இயக்கியிருக்கும் எஸ்.சசிகாந்த், மூன்று கதாபாத்திரங்களின் மனபோராட்டங்களை கிரிக்கெட் விளையாட்டு மூலம் திரைக்கதையை  அமைத்து பரபரப்பாக படத்தை நகர்த்துகிறார். மொத்தத்தில், இந்த டெஸ்டை, டெஸ்ட் டி20 என்றும் சொல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து