Idhayam Matrimony

அ.தி.மு.க. எப்போதுமே நொந்து நுலாகி போனது கிடையாது: இ.பி.எஸ். பதிலடி

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      தமிழகம்      அரசியல்
Edappadi 2020 11-16

சென்னை, அ.தி.மு.க. எப்போதுமே நொந்து நுலாகி போனது கிடையாது. நான் மட்டுமல்ல அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவருமே எதற்கும் அஞ்சியது கிடையாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடந்த அமலாக்கத் துறை சோதனையில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அமலாக்கத் துறை சோதனை நடத்தியதை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் நீதிமன்றத்தில் தொடுத்தது.   இது குறித்து, சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. 

இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என டாஸ்மாக் தரப்பில் கோரப்பட்டுள்ளது.வேறு மாநிலத்தை அணுகினால், அம்மாநில பிரச்சினைகளை தான் அங்குள்ள ஊடகங்கள் முன்னெடுக்கும். இந்த பிரச்சினையை கண்டுகொள்ள மாட்டார்கள். அதற்குத்தான் இந்த நாடகத்தை தமிழக அரசு நடத்துகிறது. சட்டப்பேரவையில் இருந்து நாங்கள் வெளியேற்றப்பட்ட போது ‘நொந்து நுலாகி போன அதிமுக தொண்டர்கள் தான் அந்த தியாகிகள்’ என்று முதல்வர் சொல்கிறார். அ.தி.மு.க. எப்போதுமே நொந்து நுலாகி போனது கிடையாது. நாங்கள் எவ்வளவோ பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறோம். அவரால் ஒரு பிரச்சினையை சந்திக்க முடியுமா? நான் மட்டுமல்ல அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவருமே எதற்கும் அஞ்சியது கிடையாது.

கச்சத்தீவு தி.மு.க. ஆட்சியில் தான் இலங்கைக்கு தாரைவார்க்கப் பட்டது. இவ்வாறு தமிழகத்துக்கு துரோகம் செய்தது எல்லாம் தி.மு.க. தான்.  நீட் தேர்வு விலக்கு அளித்தால் தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று அதிமுக அறிவிக்க வேண்டும் என முதல்வர் சொல்கிறார். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம். அவருக்கு என்ன அவ்வளவு அக்கறை? நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க. தான். 2026 தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டப்படும்.   என்று இ.பி.எஸ். கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து