முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்

புதன்கிழமை, 9 ஏப்ரல் 2025      தமிழகம்
Darshan 2024-06-22

Source: provided

சென்னை : நடிகர் தர்ஷனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

தமிழ் திரைப்பட நடிகா் தா்ஷன், சென்னை முகப்பேரில் குடும்பத்துடன் வசிக்கிறாா். இவா் ‘கூகுள் குட்டப்பா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளாா். மேலும், விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தா்ஷன் நடித்து வருகிறாா். சில நாள்களுக்கு முன் தா்ஷன் வீட்டின் முன்பு உயா்நீதிமன்ற நீதிபதியின் மகன் காரை நிறுத்திவிட்டு, தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் அருகிலிருந்த டீக்கடையில் இருந்திருக்கிறார். வெகுநேரம் வீட்டின் முன்பு காா் நிறுத்தப்பட்டிருந்ததால், அதை எடுக்குமாறு தா்ஷன் கூறினாராம். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனா். இதில் காயமடைந்த நீதிபதியின் மகன், அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக நீதிபதியின் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், தர்ஷன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், இந்த வழக்குத் தொடா்பாக தா்ஷனை கைது செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதேவேளையில் தா்ஷன் கொடுத்த புகாரின்பேரில், நீதிபதியின் மகன் தரப்பு மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தர்ஷன் கொடுத்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு நேற்று அவருக்கு நீதிபதிகள் ஜாமீன் வழங்கியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து