முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனித பற்கள் அபாயகரமான ஆயுதங்கள் அல்ல: மும்பை உயர்நீதிமன்றம் கருத்து

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      இந்தியா
mumbai-high-court

மும்பை, மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் வகையில் மனித பற்கள் அபாயகரமான ஆயுதங்களாக கருத முடியாது என,  மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மும்பையில் சொத்து விசயமாக ஒரு பெண்ணிற்கும் அவரது நாத்தனாருக்கும் (கணவரின் தங்கை) இடையில் தகராறு இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டபோது, நாத்தனார் தனது அண்ணியை கடித்துள்ளார். இதனால் அந்த பெண் (அண்ணி) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் காயம் விளைவிக்கக் கூடிய பயங்கர ஆயுதத்தால் தாக்குதல் பிரிவின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

பயங்கர ஆயுதத்தால் காயம் ஏற்படுத்தியதாக தன் மீது போடப்பட்டுள்ள எப்.ஐ.ஆர்-யை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்சில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனித பற்களை பயங்கரமான ஆயுதங்களாக கருத முடியாது. இதனால் பயங்கர ஆயுதங்கள் மூலமாக காயம் ஏற்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.-யை ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ சான்றிதழில் பற்கள் தடம் பதிந்துள்ளது. அதனால் லேசான காயம் தான் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் விபா கண்கண்வாடி, சஞ்சய் தேஷ்முக் தெரிவித்துள்ளனர். இந்த தண்டனைச் சட்டம் பிரிவு 324-ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்படாதபோது, குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணையை எதிர்கொள்ள வைப்பது சட்ட செயல்முறையை தவறாகப் பயன்படுத்துவதாகும் எனத் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து