முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி செங்கோட்டை, ஜாமா மசூதிக்கு வெடி குண்டு மிரட்டல்

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      இந்தியா
bomb-threat 2025-01-04

Source: provided

டெல்லி: டெல்லி செங்கோட்டை, ஜாமா மசூதிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. 

டெல்லியிலுள்ள புகழ்பெற்ற செங்கோட்டை மற்றும் ஜாமா மசூதிக்கு நேற்று (ஏப்.10) காலை செல்போன் வாயிலான மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சென்று அந்த இரண்டு கட்டடங்களிலும் அதனைச் சுற்றியுள்ள வளாகத்திலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், அவர்கள் மேற்கொண்ட சோதனையின் முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படாததினால் மர்ம நபர் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், தகவலறிந்த உடன் செங்கோட்டை மற்றும் ஜாமா மசூதியின் வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது எனவும் அந்தச் சோதனைகளில் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ரானா அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ள நிலையில் அவர் ஆஜர்படுத்தப்படும் தில்லியின் பட்டியலா நீதிமன்றம் அமைந்துள்ள பகுதி முழுவதும் ராணுவப் படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து