முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேஸிங்கில் 30 முறை நாட் அவுட்: டோனிக்கு சிறப்பு போஸ்டர் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      விளையாட்டு
Dhoni 2024-10-26

Source: provided

மும்பை : ஐ.பி.எல். வரலாற்றில் டோனி படைத்த சாதனைக்கு ஐ.பி.எல். சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

ஆட்ட நாயகன்...

 ஐ.பி.எல். வரலாற்றில் சேஸிங்கில் டோனி படைத்த சாதனைக்கு ஐ.பி.எல். சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் சி.எஸ்.கே. அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கேட்ச், ஸ்டம்பிங், ரன் அவுட், கேப்டன்சி (தலைமைப் பண்பு), பேட்டிங் என அசத்திய டோனிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. ஐ.பி.எல். வரலாற்றில் விக்கெட் கீப்பராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபராக டோனி சாதனை படைத்துள்ளார்.

30 முறை நாட் அவுட்... 

இது மட்டுமில்லாமல் சேஸிங்கில் 30 முறை நாட் அவுட் (ஆட்டமிழக்காமல்) இருந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். மொத்தமாக 41 முறை ஆட்டமிழக்காமல் இருந்த டோனி அதில் 30 முறை ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதை ஐ.பி.எல். தனது எக்ஸ் பக்கத்தில் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.

சேஸ் செய்யப்பட்ட போட்டிகளில் 

ஆட்டமிழக்காமல் இருந்தவர்கள்:

1. எம்.எஸ்.டோனி -30.

2. ரவீந்திர ஜடேஜா - 27.

3. தினேஷ் கார்த்திக் -24.

4. டேவிட் மில்லர் - 23.

5. விராட் கோலி - 22.

6. யூசுப் பதான் -22.

7. ஏபிடி வில்லியர்ஸ்- 19.

8. சுரேஷ் ரெய்னா - 19.

9. ரோஹித் சர்மா -18.

10. கைரன் பொல்லார்ட் -17.

11. ஹார்திக் பாண்டியா- 17.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து