முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

201 விக்கெட்களை வீழ்த்தி கீப்பிங்கில் டோனி புதிய சாதனை

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      விளையாட்டு
Dhoni 2024-05-13

Source: provided

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம். எஸ். டோனி ஐ.பி.எல். போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

சுவாரசிய திருப்பங்கள்... 

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ நகரில் திங்கள்கிழமை(ஏப். 14) நடைபெற்ற ஐ.பி.எல். ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த போட்டியில் சுவாரசிய திருப்பங்கள் அரங்கேறின. முதல் இன்னிங்சில் 14-ஆவது ஓவரில் ஜடேஜா வீசிய பந்தை பேட்ஸ்மேன் ஆயுஷ் படோனி அடிக்காமல் நழுவவிட, அதனை கண்ணிமைக்கும் நேரத்தில் பிடித்து ஸ்டம்ப்பை பதம்பார்த்து பேட்ஸ்மேனை ரன் அவுட் ஆக்கி அசத்தினார் டோனி.

புதிய சாதனை...

இந்த நிலையில், இந்த விக்கெட் மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் ஒரு விக்கெட் கீப்பராக 200-ஆவது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்திருக்கிறார் டோனி. 271 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள டோனி, இதுவரை 155 கேட்ச், 46 ஸ்டம்பிங் செய்து 201 விக்கெட்களை வீழ்த்த காரணமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை பட்டியலில் டோனிக்கு அடுத்த இடத்தில், தினேஷ் கார்த்திக்(182 விக்கெட்), அதனைத்தொடர்ந்து, ஏபி டி வில்லியர்ஸ்(126 விக்கெட்) உள்ளனர்.

அதிக பகிர்வு...

இந்த போட்டியில் சுவாரசியமானதொரு ஓவராக கடைசி ஓவர் அமைந்ததை யாராலும் மறுக்க முடியாது. கடைசி ஓவரில் மகிஷா பதிரானா பந்தை பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் அடிக்காமல் நழுவவிட, அதனை கண்ணிமைக்கும் நேரத்தில் பிடித்து எதிர்முனையில் இருந்த ஸ்டம்ப்பை நோக்கி வீசி பேட்ஸ்மேனை ரன் அவுட் ஆக்கி அசத்தினார் டோனி. இதனை சற்றும் எதிர்பார்க்காத அப்துல் ஷமாத் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த விடியோ கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளப் பக்கங்களை ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து