முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில உரிமைகளை பாதுகாக்க குழு: முதல்வர் ஸ்டாலினுக்கு குரியன் ஜோசப் நன்றி

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2025      தமிழகம்
CM Stalin 2024-12-10

Source: provided

சென்னை : மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், தமிழக உரிமைகளை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்று நேற்றுமுன்தினம் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில், மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த அவ்வப்போது இதுபோன்ற ஆய்வுகள் தேவை. மத்திய- மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி சார்ந்த கொள்கைகள், நிர்வகிக்கும் அதிகாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்துவது அவசியம், ஊதியம் வாங்கமாட்டேன் என்ற கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் ஏற்றுக் கொண்டார் என்றார்.

மத்திய-மாநில அரசுகளின் அதிகார உறவுகள் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்டு உள்ள உயர்மட்டக்குழுவின் தலைவரான நீதிபதி குரியன் ஜோசப், 1979-ம் ஆண்டு கேரள ஐகோர்ட்டில் வக்கீல் பணியை தொடங்கியவர். 1987-ல் அரசு வக்கீலாகவும், 1994-1996 இடைபட்ட காலங்களில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும், 1996-ல் மூத்த வக்கீலாகவும் நிலை உயர்வு பெற்றார். அதன்பின்னர், 2000-ம் ஆண்டு கேரள ஐகோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 

கேரள ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக 2 முறையும், இமாசலபிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக 2010-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி முதல் 2013-ம் ஆண்டு மார்ச் 7-ந்தேதி வரையும் இருந்தார். அதனையடுத்து 2013-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, 5 ஆண்டுகள் பணியாற்றி, 2018-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

மேலும் கல்வி, சட்டச் சேவைகள் சார்ந்து பல்வேறு பொறுப்புகளிலும் இருந்துள்ளார். 2017-ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 4 நீதிபதிகளில் குரியன் ஜோசப்பும் ஒருவர். நீதிபதி நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர கொலீஜியத்தில் சீர்திருத்தம் தேவை என்று கூறியவர். குறிப்பாக முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை தவறு என்று தீர்ப்பு அளித்தவர் குரியன் ஜோசப்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து