முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் ரூ. 3 கோடி மதிப்பில் கலைஞர் திரைக்கருவூலம் அமைக்கப்படும் : அமைச்சர் சாமிநாதன் தகவல்

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2025      தமிழகம்
Suwminathan 2024-09-11

Source: provided

சென்னை : சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் எம்.ஜி.ஆா். திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கலைஞர் திரைக் கருவூலம் அமைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவித்துள்ளார்.

பேரவையில் புதன்கிழமை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசியதாவது: தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும். சமயம், இலக்கியம் மட்டுமின்றித் தமிழ் இலக்கிய உலகில் பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசைத்திறன் போன்ற பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர், நூல் பல படைத்துள்ளவர், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் தலைவராகத் திகழ்ந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு நிறைவுபெறுவதை தொடர்ந்து அவர்தம் தொண்டுகளைப் போற்றி அவரது நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

இசை முரசு நாகூர் இ.எம். அனிபா நூற்றாண்டு விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும். தமிழ்நாடு சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வஃக்பு வாரியத் தலைவராகவும் தொண்டாற்றிய தமிழ் இசைப் பாடகர், திராவிட இயக்கக் கொள்கைகளை தனது தனித்துவமிக்க குரல் வளத்தால் இசைப் பாடல்களாக பாடியவர், “இசை முரசு” என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் போற்றப்பட்டவர். இத்தகைய பல்வேறு பெருமைகள் கொண்ட இசை முரசு நாகூர் இ.எம். அனிபா நூற்றாண்டு நிறைவுபெறுவதையொட்டி அன்னாரின் நூற்றாண்டு விழா நாகப்பட்டினம் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நினைவாக விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அரங்கம் அமைக்கப்படும். பாரதிதாசன் (1891-1964) அவர்கள் தம் எழுச்சி மிக்க எழுத்துக்களால், “புரட்சிக் கவிஞர்” என்றும் “பாவேந்தர்” என்றும் அழைக்கப்பட்டார். அவர் “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு, 1969இல் சாகித்திய அகாடமியின் விருது பெற்றவர். அவரது இலக்கியப் பணிகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் விதமாக விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அரங்கம் அமைக்கப்படும்.

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா கலையரங்கமானது, 1969ஆம் ஆண்டு சிறுவர் அரங்கமாகச் செயல்பட்டு, 1971ஆம் ஆண்டில் அண்ணா கலையரங்கமாகப் பெயர் மாற்றப்பட்டது. வேலூர் மாநகர மக்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்ற அரங்கமாகத் திகழ்ந்தது. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்ட வேலூர் அண்ணா கலையரங்கத்தினைக் குளிர்சாதன வசதி, வாகன நிறுத்தம், புதிய கழிப்பறைகள், ஜெனரேட்டர் வசதி, நவீன எல்.இ.டி. மின் விளக்குகள், ஒலி அமைப்புகள் மற்றும் கண்காணிப்புக் கேமரா வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட அதிநவீன அரங்கமாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்தில் தென்னிந்தியத் திரைப்படங்களுக்கான ஓர் ஆவண மையமாகத் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் திரைப்படங்கள் சார்ந்த புகைப்படங்கள், கதைப் புத்தகங்கள், பாடல் புத்தகங்கள், கலை சார்ந்த விலைமதிப்பற்ற பழைமையான மற்றும் குறும்படங்களை எண்மியமாக்கி பாதுக்காத்திடும் வகையில் “முத்தமிழறிஞர் கலைஞர் திரைக் கருவூலம்” ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து