முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 வரிசைகளிலும் இறங்கிய நரைன்

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2025      விளையாட்டு
Sunil-Narine 2025-04-16

Source: provided

ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் பேட்டிங் செய்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் பந்துவீச்சாளராக விளையாடி வந்த சுனில் நரைன் கடைசி வரிசையில் தான் ஆரம்ப கட்டத்தில் பேட்டிங் செய்து வந்தார். பின்னர் அவரிடம் இருந்த பேட்டிங் திறமையை கண்டுபிடித்த கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை முன்வரிசையில் பேட்டிங் செய்ய அனுப்பியது.

இந்த முடிவு கொல்கத்தா அணிக்கு நல்ல முடிவை கொடுத்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சீனில் நரேன் அதிரடியாக ரன்களை குவித்து கொல்கத்தா அணியில் வெற்றிக்கு பெரிதும் உதவினார். பின்னர் அடுத்தடுத்த சீசன்களில் அவரது பேட்டிங் அணிக்கு கைகொடுக்கத்தால் அவர் நடுவரிசையிலும் பின்வரிசையிலும் களமிறக்கப்பட்டார். அவ்வகையில் ஐபிஎல் தொடரில் சுனில் நரேன், 15 முறை முதல் வரிசையிலும், 45 முறை 2 ஆம் வரிசையிலும் பேட்டிங் செய்துள்ளார். மேலும், அவர் ஆறாவது மற்றும் மூன்றாம் வரிசையில் தலா ஒரு முறையும் நான்காம் வரிசையில் 8 முறையும் ஐந்தாவது வரிசையில் ஏழு முறையும் பேட்டிங் செய்துள்ளார்.

___________________________________________________________________________

அணியில் இணைந்த மயங்க் யாதவ்

இந்திய வீரர்களில் அதிவேகமாக பந்தினை வீசி புகழ்ப்பெற்றவர் வரிசையில் மயங்க் யாதவும் ஒருவர். ஆர்சிபிக்கு எதிராக 156.7 கி.மீ./மணி வேகத்தில் பந்து வீசியுள்ளார். தில்லியைச் சேர்ந்த மயங்க் யாதவ் 4 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இளம் வீரரான மயங்க் யாதவ் (22 வயது) குறைவான போட்டிகளிலேயே கவனம் பெற்றுவிட்டார்.

காயம் காரணமாக விலகியிருந்த மயங்க் யாதவ் தற்போது மீண்டும் உடல்தகுதி பெற்று அணியில் இணைந்துள்ளார். லக்னோ அணி சிஎஸ்கேவிடம் போதிய அளவுக்கு பந்துவீச்சாளர்கள் இல்லாமல் தோற்றது. அதனால், இவரது வருகை மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

___________________________________________________________________________

46 வயதில் தந்தையான ஜாகீர் கான்

முன்னாள் இந்திய வீரரும் லக்னோ அணியின் ஆலோசகருமான ஜாகீர் கான், அவரது மனைவி சாகரிகாவுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இடதுகை வேகப் பந்துவீச்சாளரான ஜாகீர் கான் 2017இல் ஓய்வு பெற்றார். பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சியாளராக இருந்தார். தற்போது, லக்னோ அணிக்கு ஆலோசலகராக செயல்பட்டு வருகிறார். ஹிந்தி நடிகை சாகரிகா காட்கே உடன் ஜாகீர் கானுக்கு 2017இல் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் இந்தத் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நடிகையும் ஜாகீர் கானின் மனைவியுமான சாகரிகா காட்கே தனது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்பட்டத்தினை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் குழந்தையின் பெயர் ஃபதேசின்ஹ் கான் எனக் குறிப்பிட்டுள்ளார். லக்னோ அணியும் தங்களது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. முன்னாள் வீரர்கள், இளம் வீரர்கள் உள்பட பலரும் இந்தத் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து