முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசைத்தறி உரிமையாளர்கள் பிரச்சினையைத் தீர்க்க அரசு நடவடிக்கை: அமைச்சர் தகவல்

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2025      தமிழகம்
Thangam 2023 04 05

சென்னை, “விசைத்தறி உரிமையாளர்கள் பிரச்சினையைத் தீர்க்க எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது” என்று சட்டப்பேரவையில் அ.தி.மு.க. கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீமானத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.17) நேரமில்லா நேரத்தின்போது, கோவை, திருப்பூரில் நடைப்பெற்று வரும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

அப்போது, “கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 1.5 லட்சம் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவர்கள் 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் கூலி உயர்வு கேட்டு போராடி வருகின்றனர்.  கடந்த ஜன.12 முதல் இன்று வரை மாவட்ட ஆட்சியர்கள், துறை அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.பி.க்கள் அனைவரிடமும் மனு கொடுத்துவிட்டனர். இதுவரை இவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. கடந்த மார்ச் 19 முதல் இன்று வரை 29 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

 கோவை மாவட்டம், சோமனூரில் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் 12 பேர் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தினமும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். எனவே இந்த அரசு உடனடியாக கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும்” என்று பேசினார்.

அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசும்போது “அரசும் நிலைமையின் தீவிரத்தை முழுமையாக உணர்ந்திருக்கிறது. அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இவ்விவகாரத்தில் அரசு முழு கவனத்தோடு உள்ளது. இப்பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது” என்று கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து