முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகரிக்கும் என்கவுன்ட்டர்கள்: மதுரை ஐகோர்ட்டு கண்டனம்

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2025      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

மதுரை, துப்பாக்கி கொடுப்பது என்கவுண்டர் செய்வதற்கு அல்ல.  தற்காப்புக்கு தான் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது

திருச்சியை சேர்ந்த சத்யஜோதி என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனது சகோதரர் வெள்ளைக்காளி தற்போது சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். சமீபத்தில் மதுரையில் கிளாமர் காளி என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கும் வெள்ளைக்காளிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், போலீசார் உள்நோக்கத்துடன் வெள்ளைக்காளியை இந்த வழக்கில் தொடர்புபடுத்தி உள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் என்பவர் சமீபத்தில் என்கவுன்ட்டரில் இறந்துவிட்டார். எனவே, வெள்ளைக்காளியையும் போலீசார் என்கவுன்ட்டர் செய்ய வாய்ப்புள்ளது. ஆகவே, அவரது விசாரணையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த மனு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதி கூறுகையில், "தமிழ்நாட்டில் சமீபத்தில் என்கவுன்ட்டர்கள் அதிகரித்து உள்ளன. போலீஸ் அதிகாரிக்கு துப்பாக்கி கொடுத்திருப்பது என்கவுன்ட்டர் செய்வதற்கு அல்ல.. தற்காப்புக்கு தான். குற்றவாளிகளை காலுக்குக் கீழ் சுட்டுப்பிடியுங்கள்.. புழல் சிறையில் உள்ள வெள்ளை காளியை மதுரை திருமங்கலம் கோர்ட்டுக்கு அழைத்து வரும்போது அவருக்கு ஆபத்து ஏற்பட்டால், அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார். .

இதனிடையே அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இரண்டு போலீசாரை ரவுடிகள் கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து