முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசுத்துணைத் தலைவர் ஜகதீப் தங்கரின் கருத்துக்கு தி.மு.க. கண்டனம்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      தமிழகம்
Trichy-Siva

Source: provided

சென்னை : குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு தி.மு.க. தரப்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தியதாக சா்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு தொடா்ந்த வழக்கில் அண்மையில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிா்ணயித்தது.

இந்தச் சூழலில், டில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநிலங்களவை பயிற்சித் திட்ட நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்றாா். அப்போது, ‘குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ எனக் குறிப்பிட்ட அவா், ‘நாடாளுமன்றத்தைவிட மேலானதாக நீதிமன்றம் செயல்படுவதாக’ சாடினாா்.

இந்த நிலையில், ஜகதீப் தன்கருக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா,  ”அரசியலமைப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட அதிகாரங்களின் படி நிர்வாகம், சட்டமன்றம்/ நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் இம்மூன்று துறைகளும் அவரவர் துறைகளில் இயங்கினாலும் அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது. 

ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களின் பங்கு  குறித்து உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்ட பிரிவு 142 ஐ பயன்படுத்தி சமீபத்தில் தெளிவுபடுத்தி உள்ளது.  இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த துணைக்குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை. இந்தியாவில் "சட்டத்தின் ஆட்சி" தான் நடக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து