முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் ஸ்ரீ குறித்து அவதூறு: குடும்பத்தினர் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      சினிமா
SRI 2025-04-18

Source: provided

சென்னை : நடிகர் ஸ்ரீ குறித்து அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஸ்ரீ. இவர் கடைசியாக நடித்த 'இறுகப்பற்று' படமும் வரவேற்பை பெற்றது. இதன்பின், நடிகர் ஸ்ரீ நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில், நடிகர் ஸ்ரீ உடல் எடை மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டார். இதுதொடர்பான புகைப்படங்களை கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ஸ்ரீக்கு என்ன ஆனது, அவருக்கு சரியான உளவியல் சிகிச்சை தேவை என்று சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை குறித்து அவரது குடும்பத்தினர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையில், நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். தற்போது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து வருகிறார் என்று நண்பர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறோம். நடிகர் ஸ்ரீயின் உடல் நிலை குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம், அது அவரது மனநிலையை பாதிக்கக்கூடும்.

ஸ்ரீயின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவதூறு பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து