முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறை: கீப்பர் செய்த தவறுக்கு நோ பால்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      விளையாட்டு
IPL 2023 08 02

Source: provided

மும்பை : ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக கீப்பர் செய்த தவறுக்கு நோ பால் வழங்கப்பட்ட சம்பவம் ரசிகர்களை ஆச்சரியம் அடைய செய்துள்ளது.

ரசிகர்கள் ஆச்சரியம்...

வான்கடே மைதானத்தில்  நடைபெற்ற போட்டியில் இதற்கெல்லாம் நோ பால் தருவார்களா என ஐ.பி.எல். ரசிகர்கள் ஆச்சரியமடையும் அளவுக்கு ஒரு நிகழ்வு நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்யும்போது 6.4ஆவது ஓவரினை ஜீசன் அன்சாரி வீசும்போது மும்பை பேட்டர் ரியான் ரிக்கல்டன் அடித்த பந்தினை பாட் கம்மின்ஸ் கேட்ச் பிடித்தார்.

நோ பால்... 

இந்த விக்கெட் ஆட்டத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்பட்ட நேரத்தில் நடுவர் நோ பால் என அறிவித்தார். பந்துவீச்சாளர் எந்தத் தவறும் செய்யவில்லை. மாறாக இந்தமுறை கீப்பர் செய்த தவறுக்கு நோ பால் தரப்பட்டுள்ளது. பந்து வீசும்போது விக்கெட் கீப்பர் பந்தினை ஸ்டம்புக்கு முன்பாக பிடிக்கக் கூடாது. இது பொதுவாக ஸ்டம்பிங் செய்யும்போது சோதிப்பார்கள். ஆனால், ஆட்டத்தில் பந்துவீசும் போது ஸ்டம்பிங் இல்லாவிட்டாலும் இதைப் பரிசோதிப்பார்களென ஐ.பி.எல். ரசிகர்களுக்கு தற்போது தான் தெரிய வந்துள்ளது.

கீப்பர் தவறினால்...

எம்.சி.சி.யின் 27.3ஆவது விதியின்படி பந்து பேட்டில் படும்வரை அல்லது ஸ்டம்பினை தாண்டும்வரை கீப்பரின் கையுறை ஸ்டம்பிற்கு பின்புறம் மட்டுமே இருக்க வேண்டும். சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் கிளாசன் செய்த தவறினால் விக்கெட் இழப்பு மட்டுமில்லாமல் நோ பாலும் கொடுக்கப்பட்டது. பின்னர், இறுதியில் மும்பை அணி 18.1 ஓவர்களில் 166/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து