முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரஜ் சோப்ரா முதலிடம்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      விளையாட்டு
Neeraj-Chopra 2023 08 19

Source: provided

தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் போட்ச் இன்விடேஷனல் தடகள போட்டி நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். 6 வீரர்கள் பங்கேற்ற ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா 84.52 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார்.

தென் ஆப்பிரிக்காவின் டவுவ் ஸ்மித் (82.44) 2-வது இடமும், டன்கன் ராபர்ட்சன் (71.22) 3-வது இடமும் பிடித்தனர். தென் ஆப்பிரிக்க போட்டியை தொடர்ந்து வரும் மே 16-ம் தேதி தோகாவில் நடைபெறும் டைமண்ட் லீக் தொடரில் கலந்து கொள்கிறார் நீரஜ் சோப்ரா.

_________________________________________________________________________________________________________

மாற்றாக களமிறங்கும் ஷானகா

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்த க்ளென் பிலிப்ஸ் தொடைத் தசையில் ஏற்பட்ட காயத்தினால் இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டார். ஒரு போட்டியில்கூட விளையாடாத சிறந்த பேட்டர், பீல்டர், சுழல்பந்துகளை வீசக்கூடிய பிலிப்ஸ் சிறந்த ஆல்-ரவுண்டர் என்பது கவனிக்கத்தக்கது. தற்போது, இவருக்குப் பதிலாக இலங்கையின் ஆல்ரவுண்டர் தசுன் ஷானகாவை குஜராத் அணி தேர்வு செய்துள்ளது.

கடந்த 2023 ஐ.பி.எல். தொடரில் ஷானகா குஜராத் அணியில் விளையாடினார். 102 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷானகா 1,456 ரன்கள் 33 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். குஜராத் அணி ஷானகாவை ரூ.75 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

_________________________________________________________________________________________________________

சோதனையிட்ட சூர்யகுமார்

ஐ.பி.எல். தொடரின்  போட்டியில் மும்பை - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் நடுவே நகைச்சுவையான சம்பவம் அரங்கேறியது. கடந்த 12-ந் தேதி ஐதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதின. அந்த போட்டியில் ஐதராபாத் அணி வீரர் அபிஷேக் சர்மா சதம் விளாசியவுடன் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்துக்காட்டி தனது சதத்தை கொண்டாடினார். அவர் அனைத்து போட்டியிலும் அதனை எடுத்து வந்ததாகவும் இந்த போட்டியில் தான் அதனை எடுத்துகாட்டியதாகவும் சக அணி வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் சூர்யகுமார் யாதவ், இன்னைக்கு என்னடா எழுதி கொண்டு வந்திருக்க என்பது போல அவர் பாக்கெட்டை சோதனையிட்டார். ஆனால் அவர் பாக்கெட்டில் எதுவும் கிடைக்கவில்லை. உடனே இருவரும் சிரித்தப்படி கடந்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

_________________________________________________________________________________________________________

சரியாக அமையவில்லை: கம்மின்ஸ் 

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய மும்பை அணி 18.1 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில், போட்டிக்கு பிறகு ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியதாவது: இது கடினமான ஆடுகளம்தான். இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் அப்படி இல்லை. நாங்கள் இன்னும் கூடுதலாக சில ரன்கள் அடித்திருக்க வேண்டும். மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் 160 ரன்கள் என்பது இந்த ஆட்டத்தில் குறைவான இலக்காக மாறிவிட்டது.  இந்த சூழலில் இருந்து இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இந்த சீசனில் எங்களுக்கு எதுவும் சரியாக அமையவில்லை என தெரிவித்தார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து