முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணி உறுதியான மகிழ்ச்சி: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு விருந்தளிக்கிறார் இ.பி.எஸ்..!

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      அரசியல்
Eps 024-12-03

சென்னை, சென்னையில் ஏப். 23 ஆம் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்தளிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. பா.ஜ.க.வுடன் இனி கூட்டணியே கிடையாது என்று கூறிய இ.பி.எஸ். தற்போது தேர்தலுக்காக கூட்டணி வைத்துள்ளார்.

சமீபத்தில் தமிழகம் வந்த அமித் ஷா, கூட்டணி குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்தையையும் முடித்து கூட்டணி அறிவிப்பையும் வெளியிட்ட பின்னரே டில்லி சென்றார். இதையடுத்து தேர்தல் பணிகளில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு விருந்தளிக்க உள்ளார்.

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வருகிற ஏப். 23 ஆம் தேதி தடபுடலாக விருந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்காக எம்.எல்.ஏ.க்கள் தீவிரமாக பணியாற்றவும் அந்த தொகுதிகளில் வெற்றி பெற வியூகங்களை சிறப்பாக வகுக்கவும் ஊக்குவிக்கும் பொருட்டு இந்த விருந்து அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தேர்தல் கூட்டணி உறுதியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார். தொடர்ந்து வருகிற மே 2 ஆம் தேதி அ.தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து