முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்வியிலும் ஆட்ட நாயகன்: வாழ்த்து மழையில் டிம் டேவிட்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      விளையாட்டு
de-Villiers 2023 08 18

Source: provided

பெங்களூரு : தோல்வியிலும் ஆட்ட நாயகன் விருது வென்ற டிம் டேவிட்டுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

டிம் டேவிட் 50... 

ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 14 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு தரப்பில் டிம் டேவிட் 50 ரன் எடுத்தார். தொடர்ந்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் 12.1 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 33 ரன் எடுத்தார்.

ஆட்ட நாயகன்... 

பொதுவாக வெற்றி பெற்ற அணியில் இருந்தே ஆட்ட நாயகன் விருது கிடைக்கும். ஆனால், இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியது டிம் டேவிட் தான் என அந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது. தோல்வியிலும் ஆட்ட நாயகன் விருது வென்ற டிம் டேவிட்டுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதுபோல் ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை 28 முறை நடைபெற்றுள்ளது. 2008 ஐபிஎல் போட்டியில் எஸ். கோஸ்வாமி முதல்முறையாக தோல்வியிலும் ஆட்ட நாயகன் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி முதலிடம்...

ஒரு அணியின் ஒட்டுமொத்த ரன்களும் 100க்கு குறைவாக இருக்கும்போது ஒரு வீரர் அரைசதம் அடித்தது இதுவே முதல்முறை. ஆர்.சி.பி. அணியின் ஒட்டுமொத்த ரன்களைவிட 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக டிம் டேவிட் அடித்தார். இதற்கு முன்பாக முதல் பேட்டிங்கில் அணியின் குறைவான ரன்களின் போதும் அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் இருந்தார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து