முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்வாகக் குழுக்கூட்டத்தில் நடந்தது என்ன? துரை வைகோ - மல்லை சத்யா சமரசம்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2025      தமிழகம்
DuraiVaiko--MallaiSathya

சென்னை, ம.தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுடனான மோதல் காரணமாக, கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று அறிவித்தார். கட்சிக்கு எதிராக மல்லை சத்யா ஆதரவாளர்கள் செயல்படுவதாகக் கூறி பதவி விலகுவதாக துரை வைகோ அறிவித்திருந்தார்.

இந்த பரபரப்பான சூழலில் ம.தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டம் அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த சூழலில், சென்னை, எழும்பூரில் நடைபெற்ற ம.தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 40 மாவட்டச் செயலாளர்கள் துரை வைகோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ம.தி.மு.க.வில் அமைப்புரீதியாக மொத்தம் 66 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில் 40 மாவட்டச் செயலாளர்கள், துரை வைகோ பொறுப்பில் இருந்து விலகக்கூடாது என்று பேசி உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய மல்லை சத்யா,  துரை வைகோ அரசியலுக்கு வரவேண்டும் என்று முதன் முதலில் கூறியது நான் தான். கட்சி விரோத நடவடிக்கையில் நான் ஈடுபடவில்லை. அப்படி ஏதாவது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதை நிரூபித்தால் என் மீது நடவடிக்கை எடுக்கலாம். கட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பேசுவது தான் இங்கு முக்கிய பிரச்சனையாக உள்ளது" என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து துரை வைகோ பேசுகையில், "கட்சி நலனுக்காகத்தான் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தேன். தொண்டர்கள், நிர்வாகிகள் வற்புறுத்தல் காரணமாக தான் நான் கட்சி பணிகளில் செயல்பட தொடங்கினேன் என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, "நிர்வாகக் குழு கூட்டத்தில் எல்லோரும் தங்கள் கருத்துகளை கூறினார்கள். துரை வைகோவும், மல்லை சத்யாவும் மனம் திறந்து பேசினார்கள். ம.தி.மு.க.வுக்கும், துரை வைகோவுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று மல்லை சத்யா கூறினார். இனி இதுபோன்ற சூழலுக்கு இடம் கொடுக்க போவதில்லை என மல்லை சத்யா உறுதி அளித்துள்ளார். ஒற்றுமையாக இருந்து இயக்கத்தை வலுப்படுத்துவோம் என இருவரும் தெரிவித்துள்ளனர். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, கைக்குலுக்கி, "நாங்கள் இணைந்து ஒற்றுமையாக பணியாற்றுவோம்" என்ற உறுதியை கொடுத்துள்ளனர்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து