முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே கேப்டனாக இருந்திருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      விளையாட்டு
Harbhajan-Singh 2023-10-21

Source: provided

மும்பை : சுரேஷ் ரெய்னா  சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக இருந்திருக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

மும்பை வெற்றி...

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் சென்னை அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

பின்னடைவு...

5 முறை சாம்பியனான சென்னை இம்முறை பேட்டிங்கில் தடுமாறுவதே இந்த மோசமான செயல்பாடுகளுக்கு காரணம். பேட்ஸ்மேன்கள் ஒருவரு கூட அதிரடியாக ஆடி ரன்கள் குவிக்காதது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஒரு காலத்தில் சென்னை அணிக்காக மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடிய ரெய்னாவை போல ஒரு வீரர் இல்லாதது ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்நிலையில், சுரேஷ் ரெய்னா இன்னும் 3 ஆண்டுகள் சி.எஸ்.கே அணிக்காக விளையாடி இருக்க வேண்டும் என்றும் அவர் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்திருக்க வேண்டும் என்றும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

கேப்டனாக...

இது தொடர்பாக அவர் கூறியதாவது, சுரேஷ் ரெய்னா நினைத்ததை விட விரைவாகவே ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். என்னை பொருத்தவரை அவர் இன்னும் கூடுதலாக மூன்று ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருக்கலாம். அதேபோன்று அவர் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக இருந்திருக்க வேண்டும்.

ஆதரிக்கவில்லை...

ஆனால், நிர்வாகம் அவருக்கு ஆதரவு தராமல் ஒதுக்கி விட்டது. சி.எஸ்.கே அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடிய அவர் துணை கேப்டனாகவும் செயல்பட்டுள்ளதால் நிச்சயம் அவருக்கு கேப்டன் பதவியை நிர்வாகம் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் சுரேஷ் ரெய்னாவை கடைசி கட்டத்தில் ஆதரிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து