முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலையில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      ஆன்மிகம்
Thiruvannamalai 2023 07-22

Source: provided

திருவண்ணாமலை : சித்ரா பவுர்ணமி கிரிவலத்தில் திருவண்ணாமலையில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் பிரசித்தி பெற்றது என்றாலும், சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில், அடுத்த மாதம் (மே) 11-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.01 மணி முதல் மறுநாள் இரவு 10.25 மணி வரை சித்ரா பவுர்ணமி கிரிவலம் வருகிறது. வழக்கத்தைவிட சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், பல்வேறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

அந்த வகையில், 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. மேலும், அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப் பாதை பகுதியில் பக்தர்களுக்குத் தேவையான இடங்களில் போதுமான கழிவறைகளும், குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றன. அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என்றும், முறையான தரமான உணவுகள் வழங்க வேண்டும் இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டும் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் போலி நெய் தீபம் விற்பனை செய்யவும், கற்பூரம் ஏற்றவும் தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து