முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு.பி.எஸ்.சி. தேர்வு: தமிழ்நாட்டில் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர் முதலிடம் : வருங்காலங்களில் லட்சக்கணக்கானோர் வாழ்வில் ஒளியேற்றிடும் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      தமிழகம்
CM 2024-12-16

Source: provided

சென்னை : யு.பி.எஸ்.சி. தேர்வில் அகில இந்திய அளவில் 23-ம் இடம் பிடித்த தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர் என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நான் முதல்வன் திட்டம் வருங்காலங்களில் லட்சக்கணக்கானோர் வாழ்வில் ஒளியேற்றிடும் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

50 பேர் தேர்ச்சி... 

2024-ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஹர்ஷிதா கோயல் என்பவர் 2-ம் இடமும், டோங்க்ரே அர்ஷித் பராக் என்பவர் 3-ம் இடமும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் முதலிடமும், அகில இந்திய அளவில் 23-ம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர். மேலும் தமிழ்நாட்டில் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற 134 பேர் யு.பி.எஸ்.சி. நேர்முக தேர்வுக்கு சென்றதில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 50 பேரில் 18 பேர் 'நான் முதல்வன்' திட்டத்தில் முழு நேர உறைவிட பயிற்சி மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சியளிக்கிறது... 

இந்த நிலையில், யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- எது மகிழ்ச்சி?.... நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து