முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      இந்தியா
Modi-Amit-sha 2024-05-05

Source: provided

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு- காஷ்மீரின் பஹால்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் நேற்று (ஏப்.22) அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். இந்தத் தாக்குதலில் 12 சுற்றுலாப் பயணிகள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த நிலையில், ஒருவர் பரிதாபமாக பலியானார். அவர் யார் என்பது குறித்து இதுவரை எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், சௌதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், “பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இதுபற்றி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அவரிடம் விளக்கமளித்துள்ளேன். காஷ்மீர் தாக்குதல் பற்றி அதிகாரிகளிடம் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினேன். காஷ்மீரில் பாதுகாப்பு குறித்து தெரிந்துகொள்ள விரைவில் ஸ்ரீநகர் செல்லவிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கண்டனம் 

இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள். அவர்களின் தீய திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் உறுதியை அசைக்க முடியாது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து