முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெய்க்வாட்டுக்கு பதிலாக ஆயுஷ் மாத்ரே ஏன்..? சி.எஸ்.கே. பயிற்சியாளர் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      விளையாட்டு
CSK 2025-03-31

Source: provided

மும்பை : கெய்க்வாட்டுக்கு பதிலாக ஆயுஷ் மாத்ரேவை தேர்வு செய்யப்பட்டது குறித்து சி.எஸ்.கே. பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

6-வது தோல்வி...

ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் 8-வது லீக் போட்டியில் ஆடிய முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சுக்கு இது 6-வது தோல்வியாகும். புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் பரிதவிக்கும் சென்னை அணி எஞ்சிய 6 ஆட்டங்களிலும் தொடர்ந்து வென்றால் மட்டுமே அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும். இல்லாவிட்டால் வெளியேற வேண்டியது வரும்.

ஆயுஷ் மாத்ரே...

முன்னதாக இந்த சீசனில் இருந்து காயம் காரணமாக விலகிய ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17-வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவை சென்னை அணி சேர்த்தது. இந்த சூழலில் மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில் 32 ரன்கள் விளாசி அசத்தினார். இது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அற்புதமான திறமைகள்...

இந்நிலையில் கெய்க்வாட்டுக்கு பதிலாக ஆயுஷ் மாத்ரேவை தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங் விளக்கமளித்துள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில், " தொடர் நடந்து கொண்டிருக்கும்போது சில வீரர்களை பயிற்சிக்கு அழைத்திருந்தோம். அவர்களில் ஆயுஷ் மாத்ரே சிறப்பாக செயல்பட்டதை நானும் தோனியும் நேரில் பார்த்தோம். அவரிடம் இருக்கும் திறமைகள் மிக அற்புதமாக இருந்தன. அவர்களில் ஆயுஷ் மாத்ரே தனித்து நிற்கும் ஒரு அற்புதமான வீரர். அவர் மிகவும் ஈர்க்கக்கூடியவராகவும், மிகவும் அமைதியான இளைஞராகவும் இருந்தார். இது முக்கியமானது. எனவே, எம்.எஸ் மற்றும் நான் மிகவும் ஈர்க்கப்பட்டோம்.

நேர்த்தியான பேட்டிங்... 

எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை நாங்கள் தெளிவாகப் பெற்றுள்ளோம். மேலும் அவர் தேர்ந்தெடுக்க மிகவும் எளிதான ஒரு பெயர். நாங்கள் இருக்கும் நிலை, ருதுராஜுக்கு ஏற்பட்ட காயம் மற்றும் மற்ற வீரர்களின் பார்ம் ஆகியவற்றால், அவரை அணியில் சேர்ப்பது மிகவும் எளிதான முடிவாக அமைந்தது. அதோடு இளம் வீரரான அவரிடம் நேர்த்தியான பேட்டிங் டெக்னிக் இருப்பதாலே அவர் நேரடியாக பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவரப்பட்டார். அவரது அறிமுகம் அற்புதமாக இருந்தது" என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து