முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 100 கோடியில் சென்னை தரமணி மைய தொழில்நுட்ப வளாகம் மேம்படுத்தப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      தமிழகம்
Kovi-Chezhian 2024-11-09

சென்னை, சென்னை தரமணி மைய தொழில்நுட்ப வளாகம் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தனது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

 அரசு  கல்லூரிகளில் முன்னாள் மாணாக்கர்கள் சங்கம் தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.  

அந்தியூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 2 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தலா ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டப்படும்.

சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்திற்கு "புதிய நடமாடும் அறிவியல் கண்காட்சிப் பேருந்து" ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் அருகலை வசதி ஏற்படுத்தப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைகளுக்குத் தேவையான தளவாடங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

சுற்றுச்சுவர் இல்லாத அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சங்கிலி இணைப்பு வேலி ரூ.5.02 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஊடாடும் திறன் பலகைகள் ரூ.4.35 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும். இதற்காக, கல்லூரி ஆசிரியர் மாநில பயிற்சி மையம் அமைக்கப்படும். அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். அரசு கலை, அறிவியல், கல்வியியல் மற்றும் பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கு நிர்வாகப் பயிற்சி வழங்கப்படும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கான உள்ளிடைப் பயிற்சி, வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் வேலைவாய்ப்பு மையம் மேம்படுத்தப்படும். முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணாக்கர்களுக்கான வலை முகப்பு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். சென்னை, தரமணி, மைய தொழில்நுட்ப வளாகம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து