முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணைவேந்தர் மாநாட்டுக்கு எதிர்ப்பு: கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      தமிழகம்
CPI(M) 2025-03-21

Source: provided

உதகை : ஆளுநரின் துணைவேந்தர் மாநாட்டுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

உதகை ராஜ்பவன் மாளிகையில் பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாடு நேற்றும் இன்றும் (ஏப். 25, 26) நடைபெறுகிறது. குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கர் இன்று காலை 11.30 மணிக்கு மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றவுள்ளார். இதற்காக தில்லியில் இருந்து கோவை வந்துள்ள தன்கர், ஹெலிகாப்டர் மூலம் உதகை செல்கிறார். இந்த நிலையில் ஆளுநரின் துணைவேந்தர் மாநாட்டுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றன.

முன்னதாக, தமிழக அரசு பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த நிலையில் 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாகக் கருதப்படும் என்று சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவும் இதில் அடங்கும். அதன்படி பல்கலைக்கழக வேந்தராக இனி முதல்வர் ஸ்டாலின் செயல்படுவார் என்று கூறப்படும் நிலையில் ஆளுநரின் ஏற்பாட்டில் இந்த துணைவேந்தர் மாநாடு நடக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் ஆளுநர், துணைவேந்தர் மாநாடு நடத்துவது சட்டத்திற்கு எதிரானது என்று கூறி கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

அரசியல் மாண்புகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாடு கல்விக்கு ஒதுக்கவேண்டிய ரூ. 2,152 கோடியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை சாஸ்திரி பவன்முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் சென்னை உள்பட அனைத்து மாவட்டத் தலைநகரகங்களிலும் இன்று கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. உதகையில் ஆளுநருக்கு எதிராக திராவிடர் தமிழர் கட்சியினர் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து