முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போப் ஆண்டவர் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      உலகம்
TN 2025-04-25

Source: provided

வாடிகன் சிட்டி : புனித பீட்டர் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ள போப் ஆண்டவர் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கத்தோலிக்க திருச்சபையை 12 ஆண்டுகளாக வழிநடத்திய போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த 21-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

போப் ஆண்டவரின் உடல் அவர் வசித்து வந்த சாந்தா மார்த்தா இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  முதல் நாளில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்கள் அன்பான போப் ஆண்டவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர் .

 இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அவரது உடலுக்கு புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது. தொடர்ந்து புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்வுகளில் ஏராளமான உலக தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதன்படி அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா, ஜனாதிபதி டிரம்புடம் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ் ஆகியோர் ரோம் நகர் வாடிகனில் நேற்று கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்று. போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து