முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாகிஸ்தான் அணிகளை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம்: ஐ.சி.சி.க்கு பி.சி.சி.ஐ திடீர கடிதம்

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை, : ஐ.சி.சி. தொடர்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

26 பேர் உயிரிழப்பு...

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2008 ஆம் ஆண்டு மும்பையில் ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு இந்திய அணி, பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டது. மேலும், சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணி விளையாட மறுத்ததால், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயில் நடத்தப்பட்டன.

ஒரே குழுவில்... 

இந்த நிலையில்,  பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா  ஐ.சி.சி.க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருதரப்பு போட்டிகளில் விளையாடாவிட்டாலும், இரு அணிகளும் ஐ.சி.சி. தொடர்களில் ஒரே குழுவில் தான் விளையாடுகின்றன. இந்தப் போட்டிகளுக்கு ரசிகர்களிடம் அதிக ஆதரவும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இனி நடக்கவிருக்கும் ஐ.சி.சி. தொடர்களில் இரு அணிகளையும் ஒரே குழுவில் இணைக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி. தரப்பில் எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து