முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து ஆடுகளங்களில் சிறப்பாக செயல்படுவார்: ஹேசில்வுட் குறித்து ரவி சாஸ்திரி கணிப்பு

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      உலகம்
Ravi-Shastri 2023 04 12

Source: provided

மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஆலோசனை...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்திலுள்ள லார்ட்ஸ் திடலில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான ஆஸ்திரேலிய அணியில் பிரதான பந்துவீச்சாளர்களாக பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். அணியில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளருக்கான ஆலோசனை சென்று கொண்டிருக்கிறது.

கடினமானதாக இருக்கும்...

இது தொடர்பாக ஐ.சி.சி. ரிவ்யூவில் ரவி சாஸ்திரி பேசியதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் அல்லது ஸ்காட் போலாண்ட் இவர்கள் இருவரில் பிளேயிங் லெவனில் யாரைத் தேர்வு செய்வது என்பது மிகவும் கடினமானதாக இருக்கும். ஆனால், ஜோஸ் ஹேசில்வுட் முழு உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார். 

சிறப்பாக செயல்படுவார்... 

இங்கிலாந்து ஆடுகளங்களின் சூழல் ஜோஸ் ஹேசில்வுட்டின் பந்துவீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். ஆஸ்திரேலிய அணிக்காக லார்ட்ஸ் திடலில் கிளன் மெக்ராத் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதேபோல, ஜோஸ் ஹேசில்வுட்டும் சிறப்பாக செயல்படுவார் என நினைக்கிறேன் என்றார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் திடலில் வருகிற ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து