Idhayam Matrimony

பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஜம்மு காஷ்மீர் சட்ட சபையில் தீர்மானம்

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      இந்தியா
Jammu- -Kashmir

ஸ்ரீநகர், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் சட்ட சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 23-ந் தேதி முதல் மந்திரி உமர் அப்துல்லா தலைமையில் மந்திரி சபைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சிறப்பு சட்டசபையைக் கூட்டுவதற்கு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு, துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவுக்குப் பரிந்துரைத்தது.

இதன்படி நேற்று சட்டசபை சிறப்புக்கூட்டம் கூடியது. சபை கூடியதும், பஹல்காம் படுகொலைகள் தொடர்பாக கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் மீது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச எம்.எல்.ஏக்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து பஹல்காம் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம், ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், அவை உறுப்பினர்கள் ஏப்.22-ம் தேதி பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து